செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2025 (12:51 IST)

நடிகர் விநாயகன் குடிபோதையில் அலப்பறை… சிக்கினார் அடுத்த சர்ச்சையில்!

மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். தமிழிலும் திமிரு மற்றும் மரியான் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.  நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் விநாயகன் வர்மன் என்ற கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார்.

இந்த படத்தின் வெற்றிக்கு அவருடைய பங்கும் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் வெளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளார்.  இந்நிலையில் விநாயகன் கொச்சினில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் நின்று நிதானமில்லாமல் யாருடனோ வாக்குவாதம் செய்துள்ளார்.  

இதை அவரின் அண்டை வீட்டார் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட அது இப்போது விநாயகத்துக்கு எதிராக கண்டனங்கள் எழ வழிவகுத்துள்ளது. ஏற்கனவே இதுபோல சில சர்ச்சைகளில் சிக்கி விநாயகன் காவல்துறையில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.