இன்று ரிலீஸாகும் ஜெயிலர் 2 கிளிம்ப்ஸ்? இவ்வளவு நேரம் ஓடுமா?
தமிழ் சினிமாவில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் இயக்குனர் நெல்சன். ஆனால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுத்தார்.
அந்த படம் வெற்றியடைய அடுத்து சிவகார்த்தியோடு டாக்டர் மற்றும் விஜய்யோடு பீஸ்ட் மற்றும் ரஜினியோடு ஜெயிலர் என அவர் கிராஃப் எகிறிக்கொண்டே செல்கிறது. இப்போது ஜெயிலர் 2 பட வேலைகளில் இருக்கிறார்.
சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தின் அறிமுகக் காட்சியை நெல்சன் ரஜினியை வைத்துப் படமாக்கினார். இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு இணையத்திலும் சில திரையரங்களிலும் அந்த க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ சுமார் 4 நிமிடம் அளவுக்கு ஓடுமாறு உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.