மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் உயர்வு!
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.
நீட் தேர்வால் அநியாயமாக தனது மருத்துவக் கனவை பலிகொடுத்த அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனிதாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் நீட் தேர்வை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்தது. இருப்பினும் நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து நீக்க முடியவில்லை.
இந்நிலையில் இப்போது நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. பொது மாறும் ஓபிசி பிரிவு தேர்வர்கள் 5015 ரூபாயும், பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் 3835 ரூபாயும் தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலமாக கட்டணமாக செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.