சின்னத்திரை நடிகர் தூக்கில் தொங்கி தற்கொலை: அதிர்ச்சி தகவல்!
சின்னத்திரை நடிகர் தூக்கில் தொங்கி தற்கொலை: அதிர்ச்சி தகவல்!
கடந்த சில மாதங்களாகவே சின்னத்திரை நடிகர்-நடிகைகள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டு வரும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பெரம்பலூரில் சின்னத்திரை நடிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இந்திர குமார் என்பவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் தொடரில் நடித்து வந்தார். இவர் நேற்றிரவு தனது நண்பர்களுடன் சினிமா பார்த்துவிட்டு நண்பரின் வீட்டில் தூங்கியுள்ளார்
இந்த நிலையில் திடீரென அந்த அறையில் உள்ள மின்விசிறியில் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவருடைய உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட இந்திர குமாருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது