செல்போன் தராததால் ஆத்திரம்; தூக்கில் தொங்கிய சிறுவன்! – தூத்துக்குடியில் அதிர்ச்சி!

Prasanth Karthick| Last Modified செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (12:33 IST)
தூத்துக்குடியில் செல்போன் தனது தாய் செல்போன் தராததால் ஆத்திரத்தில் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் சீனிமுருகன். இவருக்கு ஜோதிமணி என்ற மனைவும் இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர். ஜோதிமணியின் செல்போனில் கேம் விளையாட மகன்கள் மதன் மற்றும் பாலகுரு இடையே அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று சீனிமுருகன் வேலைக்கு சென்று விட மூத்த மகன் மதனும் பள்ளிக்கு சென்று விட்டான். இந்நிலையில் பக்கத்து ஊரில் திருமணம் ஒன்றிற்காக புறப்பட்ட ஜோதிமணி, இளைய மகன் பாலகுருவை வெளியே சுற்றாமல் வீட்டில் இருக்க சொல்லியுள்ளார். செல்போன் கொடுத்தால் வீட்டிலேயே இருப்பதாக சொல்லி பாலகுரு அடம்பிடித்ததாக தெரிகிறது. இதனால் ஜோதிமணி, பாலகுருவை கடிந்து கொண்டு புறப்பட்டு சென்று விட்ட நிலையில், மாலை வீடு திரும்பிய போது பாலகுரு தூக்கில் தொங்குவதை கண்டு அலறி கத்தியுள்ளார் ஜோதிமணி.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக விளாத்திக்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். செல்போனுக்காக சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :