என் இறுதிச் சடங்குக்கு வரவண்டும்… ரசிகரின் தற்கொலைக் கடிதத்துக்கு யாஷ் பதில்!

Last Modified வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (17:04 IST)

நடிகர் யாஷின் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து யாஷ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் நடிகர் யாஷுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்லள் உருவாகி உள்ளனர். இந்நிலையில் அவரின் நடிகர் ராமகிருஷ்ணா என்பவர் குடும்ப சூழ்நிலைக் காரணமாக தற்கொலை செய்துகொண்ட போது அவரின் இறுதிக் கடிதத்தில் ‘என் இறுதி சடங்கில் யாஷ் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என் இறுதி ஆசை’ எனக் கூறியிருந்தார்.

ஆனால் அப்படிக் கலந்துகொண்டால் அதுவே தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதால் கலந்துகொள்ளவில்லை. ஆனால் டிவிட்டர் பக்கத்தில் ‘“நாங்கள் நடிகர்கள். உங்கள் கைத்தட்டலையும் விசிலையும் கேட்கவும் வாழ்கிறோம். உங்கள் அன்பை எதிர்பார்க்கிறோம். ஆனால் இதனை எதிர்பார்க்கவில்லை”
எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :