ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2024 (15:50 IST)

விக்னேஷ் சிவன் பிறந்தநாள்.. முத்தங்களை பரிமாறி கொண்ட நயன்தாரா..!

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா முத்தங்களை பரிமாறி கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது, மேலும் இன்று விக்னேஷ் சிவன் பிறந்த நாள் என்பதால் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன், 2022ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி நயன்தாராவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு "உயிர்" மற்றும் "உலகம்" ஆகிய குழந்தைகள் உள்ளனர். இருவரின் புகைப்படங்கள் அவ்வப்போது விக்னேஷ் சிவனின் மற்றும் நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவாகி வைரலாகி வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில், இன்று விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு, நயன்தாரா இன்ஸ்டாகிராமில் இனிய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இருவரும் தனிப்பட்ட முறையில் கொண்டாடிய பிறந்தநாள் புகைப்படங்கள் நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.

இந்த புகைப்படங்களில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவருக்கிடையிலான பாசமான மற்றும் ரொமான்டிக் தருணங்கள் இடம்பெற்றுள்ளன. முத்தங்கள் பரிமாறியதும் தெரிகிறது. இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்குகள், நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

Edited by Siva