வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2024 (10:10 IST)

GOAT படத்தில் நயன்தாரா நடிக்க மறுத்தக் காரணம் இதுதானா?

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான GOAT திரைப்படம் செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் கோட் திரைப்படம் உருவானது.

ரிலீஸுக்குப் பின்னர் படம் கலவையான விமர்சனங்களைப் பெற தொடங்கியது. ஆனாலும் வசூலில் குறை வைக்கவில்லை.. படம் இதுவரை 300 கோடி ரூபாய்க்கு மேல் உலகளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் அஜித், ரஜினி, சூர்யா மற்றும் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களின் ரெஃப்ரன்ஸ்களை அமைத்திருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு. அதுபோல சிவகார்த்திகேயன் மற்றும் த்ரிஷா போன்றோரின் கேமியோக்களும் ரசிகர்களை கவர்ந்தன.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார். ஆனால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நயன்தாராவைதான் நடிக்க வைக்க ஆசைப்பட்டதாக வெங்கட்பிரபு கூறியுள்ளார். ஆனால் சில காரணங்களால் நயன்தாராவால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலயில் கோட் படத்தில் பிரபுதேவா இருந்ததால்தான் அவர் அந்த படத்தை நிராகரித்துள்ளார் என இப்போது தகவல்கள் பரவி வருகின்றன.