1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 ஜூலை 2019 (08:05 IST)

ஒரே நேரத்தில் ரிலீசாகும் ஜோதிகா-நயன்தாரா திரைப்படங்கள்

நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' திரைப்படம் ஜூலை 26ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த  நிலையில் திடீரென இந்த படம் அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜோதிகா நடித்துள்ள 'ஜாக்பாட்' திரைப்படமும் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் நடித்த படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நயன்தாரா நடித்த 'கொலையுதிர் காலம்' திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதியும் ஜோதிகா நடித்த 'ஜாக்பாட்' திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதியும் வெளியாக உள்ளது. இரண்டு படங்களும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான கதையம்சம் கொண்ட படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
நயன்தாராவும் ஜோதிகாவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதனையடுத்து தற்போது இருவரது படங்களும் ஒரே நேரத்தில் ரிலீசாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 'யூஏ' சான்றிதழ் பெற்று த்ரில் கதையம்சம் கொண்ட நயன்தாராவின் 'கொலையுதிர்க்காலம்' திரைப்படமும், யூ சான்றிதழ் பெற்று காமெடி கதை அம்சம் கொண்ட 'ஜாக்பாட்' திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த இரண்டு படங்களில் எந்த படம் வெற்றி அடையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்