ரவுண்டு கட்டி அடிக்கும் ஜோதிகா: சூர்யா பிறந்தநாள் பரிசாக ஜாக்பாட் டிரெய்லர் இதோ...

Last Updated: செவ்வாய், 23 ஜூலை 2019 (13:14 IST)
ஜோதிகா மற்றும் ரேவதி நடிப்பில் உருவாகியுள்ள ஜாக்பாட் படத்தின் டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
நடிகை ஜோதிகா நடித்த ராட்சசி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'ஜாக்பாட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 
 
ஜாக்பாட் திரைப்படம் சென்சாரில் யூ சர்டிபிகேட் பெற்றுள்ளது. இன்று சூர்யாவின் பிறந்த்நாளை முன்னிட்டு இன்று ஜாக்பாட் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் சூர்யாவின் பிறந்த நாளுக்கு ஜோதிகா தரும் பிறந்தநாள் பரிசாக கருதப்படுகிறது. 
 
இந்த படத்தில் ஜோதிகாவுடன் ரேவதி, யோகிபாபு, மன்சூரலிகான், ஆனந்தராஜ், உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். 
 
இந்த படம் வரும் ஆக்ஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் இதோ... 


இதில் மேலும் படிக்கவும் :