நயன்தாராவின் காதலை அடுக்கடுக்காக கலாய்த்த ஏ1 படத்தின் ஸ்னீக் பீக் காட்சி!

Last Modified புதன், 24 ஜூலை 2019 (18:57 IST)
அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏ1’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சியில் நயன்தாராவின் காதலை பங்கமாக கலாய்த்துள்ளனர்.


 
சந்தானம் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 1 ம் தேதி வெளியாகவுள்ள  ஏ1 படத்தில் தாரா அலிசா பெர்ரி  கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோ ஜான் பால் படத்தொகுப்பை கவனிக்க, ஹரி தினேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் இப்படத்தை தயாரித்துள்ளார். 
 
காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ள  இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று சற்றுமுன் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் நயன்தாராவின் காதலை ஒவ்வொன்றாக கூறி மோசமாக கலாய்த்துள்ளனர். அதை நீங்களே பாருங்கள்.
 


இதில் மேலும் படிக்கவும் :