நயன்தாராவின் முன்னாள் காதலரை பற்றி ட்விட் செய்த விக்னேஷ் சிவன்!

Last Updated: திங்கள், 22 ஜூலை 2019 (18:19 IST)
நயன்தாராவின் முன்னாள் காதலர் சிம்புவை பற்றி இந்நாள் காதலர் விக்னேஷ் ட்விட் செய்துள்ளார். தற்போது இந்த தகவல் தான் கோலிவுட் வட்டாரங்ககளில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 


 
நயன்தாரா விக்னேஷ் சிவனும் இயக்கிய நானும் ரௌடி தான் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். அதையடுத்து கோலிவுட்டின் தற்போதைய ஹாட் காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அடிக்கடி அவுட்டிங் செல்வதும் அந்த புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்களில் பதவிடுவதுமாக இருந்து வரும் இவர்கள் கல்யாணம் பற்றி மூச்சு விடமால் இருந்து வருகின்றனர். 
 
இது இப்படி இருக்க, நயனின் முன்னாள் காதலரும்,  முதல் காதலருமான சிம்புவை பற்றி விக்னேஷ் சிவன் ட்விட் ஒன்றை செய்துள்ளார். அதாவது, நடிகர் சிம்பு திரைத்துறையில் நுழைந்து 35 வருடங்கள் ஆகியுள்ளதற்கு விக்னேஷ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பரவியில்லையே இவர்களுக்குள் இவ்வளவு ஒற்றுமை இருக்கிறதே என கூறி விக்னேஷ் சிவனை பாராட்டி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :