திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 24 நவம்பர் 2019 (16:41 IST)

விஷாலுக்கு வில்லனாகும் இயக்குனர் மிஷ்கின்!

விஷால், பிரசன்னா நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன்’ திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் விஷாலை முற்றிலும் ஒரு வித்தியாசமான கேரக்டரில் மிஷ்கின் நடிக்க வைத்ததற்கு பெரும் பாராட்டுகள் குவிந்தது
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இயக்குனர் மிஷ்கின் துப்பறிவாளன் 2’ படத்தை எடுக்கும் முயற்சியில் இருந்தார். லண்டனில் இதற்காக சமீபத்தில் லொகேஷன் பார்க்கும் படலம் நடந்தது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து விஷால் தற்போது ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் 
 
இந்த நிலையில் ’துப்பறிவாளன் 2’ படத்தை மிஷ்கின் இயக்குவது அதுமட்டுமின்றி அந்த படத்தில் வில்லன் வேடத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் விஷால் கேரக்டருக்கு இணையாக அவர் வில்லன் கேரக்டரை உருவாக்கி இருப்பதாகவும் விஷாலுக்கு சவால் கொடுக்கும் வகையில் அந்த கேரக்டர் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. விஷால் மற்றும் மிஷ்கின் மோதும் அதிரடி காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாக தெரிகிறது 
 
மேலும் இந்த படத்திலும் முதல் பாகத்தில் நடித்த பிரசன்னா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது