புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (09:25 IST)

இலண்டனில் தொடங்கியது துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு !

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு நேற்று லண்டனில் தொடங்கியுள்ளது.

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான துப்பறிவாளன் படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக முதலில் ஏ ஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் பின்னர் இளையராஜா இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது. ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற நீரவ் ஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் துப்பறியும் நாவல்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பட்டுள்ள திரைக்கதைக்கு நம்பிக்கை சேர்க்கும் விதத்தில் இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள பேக்கர் தெரு (ஷெர்லாக் ஹோல்ம்ஸின் வீடு இருந்த இடம் ) படப்பிடிப்பு நடத்த மிஷ்கின் திட்டமிட்டார். இதற்காக லண்டன் சென்று பணிகளை மேற்கொண்டார்.
இதையடுத்து நேற்று லண்டனில் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு நேற்று லண்டனில் தொடங்கியது. ஒரேக் கட்டமாக நடக்க இருக்கும் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பவுள்ளது படக்குழு.