திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By papiksha
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2019 (19:16 IST)

விஷாலின் "ஆக்ஷன்" திரைப்படம் எப்படி இருக்கு? - ஆடியன்ஸ் ரியாக்ஷன்!

சுந்தர் சி. இயக்கத்தில் நடிகர் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சாயா சிங், ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ள படம்  ஆக்‌ஷன். டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்டு ஆக்‌ஷன் களத்தில் உருவாகியுள்ள "ஆக்‌ஷன்" இன்று திரைக்கு வந்திருக்கிறது. இப்படத்தை பார்த்த ரசிகர்களின் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே காணலாம்.
ஆக்ஷன் திரைப்படத்திற்கு நல்ல WOM கிடைத்ததால், இந்த வார இறுதி வசூல் பெரிய அளவில் இருக்கும்! ஆக்ஷன் டீமிற்கு எனது வாழ்த்துக்கள்!


 
ஆக்ஷன் அருமையான திரைப்படம். இந்த படம் சுந்தர் சி அவர்களிடமிருந்து நீங்கள் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்று. சில காட்சிகள் புத்திசாலித்தனமாக இருந்தன. HHT bgm , நல்ல பாடல்கள்,  உண்மையான speed breakers. ஒட்டுமொத்தமாக ஆக்ஷன் ஒரு நல்ல படம். சுந்த்ர் சியிலிருந்து வேறுபட்ட ஒரு முயற்சி இந்த ஆக்ஷன். 


 
இதுவரை தமன்னா நடித்த மற்ற கமெர்ஷியல் படங்களை போல் அல்லாமல் ஆக்ஷன் இருக்கிறது. தமன்னா தியா என்ற கேரக்டரில்  இரகசிய ஆபரேஷன் ஸ்பெஷலிஸ்ட்டாக விஷாலுடன் நடித்துள்ளார். 


 
ஆக்ஷன் திரைப்படத்தைப் பார்க்க நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். உலகளவில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி.