வெள்ளி, 19 செப்டம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (15:13 IST)

என் ஃபேவரெட் இந்திய நடிகர் அஜித்குமார் - பாகிஸ்தான் நடிகை

natasha hussain
என் பேவரைட்  இந்திய நடிகர் அஜித்குமார் என்று பிரபல பாகிஸ்தான் நடிகையும், சூப்பர் மாடலுமான  நடாஷா தெரிவித்துள்ளார்.

நமது அண்டை நாடான பாகிஸ்தான் திரைப்படங்கள் உள்ளிட்ட பொதுபோக்கு அம்சங்கள் உள்ளது. இங்குள்ள முன்னணணி நடிகைகளில் ஒருவரும் சூப்பர் மாடலுமான நடாஷா எல்லோராலும் அறியப்படுபவர்.

இவர், லக்ஸ் ஸ்டைல் உள்ளிட்ட விருதுகள் வென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று  நடிகர் அஜித்குமாரின் துணிவு பட முதல் சிங்கிலான சில்லா சில்லா என்ற பாடல் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என இப்படத்தின்ம் தயாருப்பாளர் போனிகப்பூரும், இசையமைப்பாளரும், படக்குழவினரும் அறிவித்த நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் நடிகை நடாஷா தன் டுவிட்டர் பக்கத்தில், என் பேவரெட் இந்திய நடிகர் அஜித்குமாரின் துணிவு பட முதல் சிங்கில் வெளியாவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
natasha hussain

அதேபோல், பாகிஸ்தான் மிகப் பிரபலமான இந்திய நடிகர்கள் என்று, அஜித்குமார், ஷாருக்கான், மகேஷ்பாபு ஆகிய மூவரையும் குறிப்பிட்டுள்ளார்.

Edited by Sinoj