வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 3 நவம்பர் 2022 (17:23 IST)

இந்திய அணியை தோற்கடித்தால் ஜிம்பாவே வீரரை திருமணம் செய்வேன்: பாகிஸ்தான் நடிகை

pakistan  actress
இந்திய அணியை தோற்கடித்தால் ஜிம்பாவே வீரரை திருமணம் செய்வேன்: பாகிஸ்தான் நடிகை
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் வரும் ஞாயிறு அன்று இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணியை ஜிம்பாவே தோற்கடித்தால் ஜிம்பாவே வீரரை திருமணம் செய்து கொள்வேன் என பாகிஸ்தான் நடிகை ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 உலக கோப்பை டி20 போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் 6ம் தேதி இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் நடிகை ஷெகர் ஷின்வாரி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியை ஜிம்பாப்வே அணி தோற்கடித்தால் ஜிம்பாவே நாட்டுக்காரரை திருமணம் செய்து கொள்ள தயார் என தெரிவித்துள்ளார் 
 
இதற்கு பதில் கூறிய நெட்டிசன்கள் அப்படி என்றால் நீங்கள் கடைசிவரை சிங்கிள் தான் என கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
 
Edited by Siva