திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (10:18 IST)

யோகி பாபு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த தாதா பட தயாரிப்பாளர்!

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த ’தாதா’ என்ற திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தில் தான் ஹீரோ இல்லை என்றும் நான்கே நான்கு காட்சிகளில் மட்டும்தான் நடித்து உள்ளேன் என்றும் யோகிபாபு தெரிவித்துள்ளார்.

இப்படி யோகி பாபு பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. மேலும் படத்தின் வியாபாரத்தையும் பாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கின்னஸ்  கிஷோர் “ இந்த படத்தின் வியாபார நேரத்தில் இப்படி பேசியது படத்தின் பிஸ்னஸை பாதித்துள்ளது. படத்தில் அவர் 4 சீன் மட்டும் நடித்திருந்தால் நான் சினிமாவை விட்டே வெளியே செல்கிறேன். அப்படி 40 சீன்களுக்கு மேல் நடித்திருந்தால் அவர் சினிமாவை விட்டு விலக தயாரா.. என்னிடம் இன்னொரு படம் பண்ணித் தருவதாக சொல்லி முன்பணம் வாங்கியுள்ளார். அதனால் அவர் என் படத்தில் நடிக்காத வரை அவர் வேறு படங்களில் நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ய உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.