வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (12:10 IST)

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குனர்.. டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு

kashmir files
தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி டெல்லி உயர் நீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனுதாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 தி காஷ்மீர் ஃபைல்ஸ்’  என்ற திரைப்படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார் என்பதும், இந்தப் படம் நாடு முழுவதும் மிகப்பெரிய வசூல் பெற்றது என்பதும் தெரிந்ததே.
 
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை பார்த்த சர்வதேச திரைப்பட விழா தேர்வு குழு தலைவர் நடாவ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் குறித்து அவதூறான கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்ததாக தெரிகிறது
 
இந்த பிரச்சனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி டெல்லி உயர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran