1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (09:28 IST)

“என்ன சிவாஜி பத்தி பேசாம இளையராஜாவ புகழ்ந்துட்டு இருக்கீங்க…” ரசிகர்களின் கூச்சலால் பேச்சை நிறுத்திய கவிஞர்!

நடிகர் சிவாஜி கணேசனை பற்றி சிவாஜி கணேசன் என்ற புத்தகம் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் வெளியிடப்பட்டது.

சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு பற்றி மருதுமோகன் என்பவர் எழுதிய சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழாவில் இளையராஜா கலந்துகொண்டார். இந்த நூலில் சிவாஜி கணேசன் செய்த பல கொடைகள் மற்றும் அவரை பற்றி தெரியாத பல விசயங்களை ஆய்வு செய்து எழுதியுள்ளதாக நூலாசிரியர் முத்துமோகன் கூறியுள்ளார். இந்த நூலை வெளியிட்டு பேசினால் இசைஞானி இளையராஜா.

இந்த விழாவில் வரவேற்புரை நிகழ்த்தினார் பழம்பெரும் பாடல் ஆசிரியர் முத்துலிங்கம். அவர் பேசும் போது சிவாஜியை பற்றி எதுவும் பேசாமல் தொடர்ந்து இளையராஜாவைப் பற்றியே புகழ்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அதனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு ரசிகர்கள் பொறுமையிழந்து கூச்சலிட, அதற்கு முத்துலிங்கம் கோபித்துக் கொண்டு பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.