1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 15 டிசம்பர் 2022 (14:18 IST)

மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களே... இளையராஜா வாழ்த்து!

ilaiyaraja
நேற்று அமைச்சர் பதவியேற்ற உதயநிதிக்கு இசைஞானி இளையராஜா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
 
மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களே ! நீங்கள் இன்று அமைச்சர் பதவி ஏற்றுள்ளீர்கள். உஙக்ளை நான் வாழ்த்துவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.  முக்கியமாக நான் சொல்ல நினைப்பது என்னவென்றால் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் என வள்ளுவர் சொன்னதை போல நீங்கள் பதவி ஏற்றது உங்கள் அம்மாவுக்கு தான் மிகவும் சந்தோசமாக இருக்கும்.  வள்ளுவர் மிகவும் அழகாக சொல்லியுள்ளார். அது வந்து நிஜமாகவே நடக்கும் போது உங்கள் அம்மாவுக்கு  மிகவும் சந்தோசமாக இருக்கும்  என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். 
 
இந்த அமைச்சர் பதவியை நீங்கள் நல்ல முறையில் பொதுமக்களுக்கு சேவை செய்வதில் நீங்கள் ஈடுபட வேண்டும். நீங்கள் அரசியலுக்கு வந்து விட்டீர்கள் அமைச்சர் பதவியில் இருக்கும்போது இன்னும் பொருப்பு அதிகமாக இருக்கிறது. இந்த பொருப்பை நீங்கள் சரியாக செய்து மக்களிடம் புகழ் அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம், கண்டிப்பாக அதை நிறைவேற்றுவீர்கள் என நான் நம்புகிறேன், நன்றி வணக்கம்!.  இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்
 
Edited by Siva