காசி தமிழ் சங்கமத்தில் திரையிடப்பட்ட சிவாஜி கணேசன் திரைப்படம்!
கடந்த சில நாட்களாக காசியில் தமிழ்சங்கம் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அதில் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், திருவிளையாடல் உள்ளிட்ட படங்கள் திரையிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசி தமிழ் சங்கம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் பிரதமர் மோடி, இளையராஜா உள்பட பலர் இந்த தமிழ் சங்கத்தில் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்தது
இந்த நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் திருவிளையாடல் ஆகிய படங்களும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் ஆகிய படங்களும் காசி தமிழ் சங்கத்தில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 14 தேதி சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் திரைப்படமும், 4ஆம் தேதி டிசம்பர் 13ஆம் தேதி சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் திரைப்படமும், திரையிடப்படும் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் மாமனிதன் திரைப்படம் டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva