1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (10:22 IST)

“சிவாஜி அண்ணனுக்கு நான் மட்டும்தான் மரியாதை செய்தேன்…” இளையராஜா பேச்சு!

சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு பற்றி மருதுமோகன் என்பவர் எழுதிய சிவாஜி கணேசன் நூல் வெளியீட்டு விழாவில் இளையராஜா கலந்துகொண்டார்.

இந்த நூலில் சிவாஜி கணேசன் செய்த பல கொடைகள் மற்றும் அவரை பற்றி தெரியாத பல விசயங்களை ஆய்வு செய்து எழுதியுள்ளதாக நூலாசிரியர் முத்துமோகன் கூறியுள்ளார். இந்த நூலை வெளியிட்டு பேசினால் இசைஞானி இளையராஜா.

அப்போது “தமிழ்நாட்டில் உள்ள சிவாஜி ரசிகர்களை எல்லாம் திரட்டி ஒரு நாள் முழுவதும் அவரைப் பற்றி பேசவேண்டும். சிவாஜி அண்ணன் குதிரையில் அமர்ந்திருப்பது போல வெள்ளியில் சிலை செய்து அவருக்கு பரிசாக அளிக்கவேண்டும் என சொன்னார்கள். அதற்கான மொத்த செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அவருக்கு சினிமாவில் யாருமே உரிய மரியாதை செலுத்தவில்லை. நான் தான் செலுத்தினேன்” எனப் பேசியுள்ளார்.