திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 3 டிசம்பர் 2022 (17:01 IST)

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் இமயம் பாரதிராஜா!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் 1978 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகமாகி, ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கியவர் பாரதிராஜா. அடுத்தடுத்து ஸ்டார் அந்தஸ்து இல்லாத நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை கொடுத்து இப்பொழுது இயக்குனர் இமயமாக தமிழ் திரையுலகினரால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

ஆனால் 2000- களுக்குப் பிறகு பாரதிராஜா இயக்கிய எந்த படங்களும் வெற்றி பெறவில்லை. கடைசியாக அவர் மீண்டும் முதல் மரியாதை என்ற படத்தை இயக்கி நடித்தார். அந்த படமும் தோல்வியாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது பாரதிராஜா மீண்டும் ஒரு படத்தை இயக்கும் பணிகளில் இறங்கி விட்டாராம். இந்த படத்தின் இயக்கத்தில் அவருக்கு இயக்குனர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி மற்றும் இசைப் பணிகளில் இளையராஜாவின் மகள் பவதாரணி ஆகியோர் உதவியாக பணியாற்ற உள்ளார்களாம். இந்த படத்துக்கான வேலைகள் இப்போது தொடங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.