1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 24 ஜூன் 2019 (17:02 IST)

சிம்புவுடன் காதல்? லிப்கிஸ் ரொம்ப நல்லது! பிக்பாஸ் பிரபலத்தின் சர்ச்சை பேச்சு!

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டவர் நடிகை  ஓவியா அதேபோல் இரண்டாவது சீசனில்  சில மோசமான காரியங்களால் ரசிகர்களிடம் அதிகம் திட்டுவாங்கியே  பிரபலமடைந்தவர் ஐஸ்வர்யா. 


 
ஐஸ்வர்யா செல்லக்குட்டியாக நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டவர்.  இவரை பிக் பாஸின் மனைவி என்றெல்லாம் கலாய்த்துள்ளனர். ஏனென்றால் பிக் பாஸ் தனது செல்லக்குட்டியான ஐஸ்வர்யாவை கஷ்டப்பட்டு காப்பாற்றி ஃபைனல் வரை அழைத்து வந்தார் இருப்பினும் அவர் அந்த சீசனில் வெற்றி அடையவில்லை. 
 
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் ஆரியுடன் ஒரு புது படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். மேலும் மஹத்துடன் ஓரு படத்திலும் நடித்துவருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் லிப்கிஸ் பற்றி பேசியுள்ள அவர். "லிப்கிஸ் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. நான் ரொம்ப ரொமான்டிக் பெர்சன் எனவே  நீங்கள் எதை கொடுத்தாலும் இரண்டு மடங்காக திருப்பி கொடுத்துவிடுவேன்" என கூறி சிரித்தார். 


 
அதுமட்டுமின்றி எனக்கு நடிகர் சிம்பு மீது க்ரஷ் இருக்கிறது என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.