1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (21:56 IST)

முதலையிடம் சிக்கிய நான்கு தமிழ் நடிகைகள்! அதிர்ச்சி புகைப்படம்

ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலே ஈகோ பெரிதாக வெடிக்கும். ஆனால் 'கன்னித்தீவு' என்ற படத்தில் நான்கு ஹீரோயின்கள் இணைந்து நடித்து வருகின்றனர். வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா ஜாவேரி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தை சுந்தர்பாலு என்பவர் இயக்கி வருகிறார்.
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரை நடிகர் ஆர்யா தனது டுவிட்டரில் வெளியிட்டார். இதில் வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா ஜாவேரி ஆகிய நால்வரும் தண்ணீரில் இருப்பது போன்றும், தண்ணீரில் ஒரு முதலை இருப்பது போன்றும், எந்த நேரத்திலும் அந்த முதலையிடம் நால்வரும் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருப்பது போன்றும் உள்ளது. இந்த அதிர்ச்சி புகைப்படமே கிட்டத்தட்ட கதையை விவரித்துவிட்டது.
 
தினத்தந்தி நாளிதழில் பல நூற்றாண்டுகளாக வந்து கொண்டிருக்கும் 'கன்னித்தீவு' படக்கதைக்கும் இந்த படத்தின் கதைக்கும் சம்பந்தம் உண்டு என்று வெளியான தகவலை மறுத்த படக்குழுவினர் இரண்டு வெவ்வேறு கதைகள் என்று கூறினர். இருப்பினும் ஒரு தீவுக்கு சுற்றுலா செல்லும் நான்கு பெண்கள் வெளியே வரமுடியாமல் சிக்கி கொள்வதுதான் கதை என்று கூறப்படுகிறது