1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (12:23 IST)

ஒருவருட நட்பை குடியும் கூத்துமாக கொண்டாடிய யாஷிகா, ஐஸ்வர்யா!

பிக்பாஸில் கலந்து கொண்டு நெருங்கிய நண்பர்களாக மாறிய யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யா தத்தாவும் பிக்பாஸ் சீசன் 2 சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அதிகமாக கவனத்தை ஈர்த்தவர்கள். முதல் சீசனில் பங்குபெற்ற காயத்ரி ,சக்தி நட்பைப் போல இவர்கள் நட்பு பெரிதும் பேசப்பட்டது.
 
பிக்பாஸ் முடிந்து அனைவரும் வெளியுலக வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில் பிக்பாஸில் வீட்டில் இருந்து வெளிவந்த பிரபலங்கள் தங்கள் ஹவுஸ்மேட்டுகளை சந்தித்து தங்களது பிக்பாஸ் வீட்டு நட்பைப் புதுப்பித்து நெருங்கிய நண்பர்களாக வலம் வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸில் நெருங்கிய தோழிகளாகவும்,  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இணை பிரியாத தோழிகளாகவும்  இருந்து வரும் யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தாவின்  நட்பு தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளதை இருவரும் சேர்ந்து பிரபல ஹோட்டல் ஒன்றில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 
 

 
யாஷிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தை பார்க்கும்போது  இருவரும் ஏதோ ஒரு பாரில் இருப்பது போல் தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்ஸ், இருவரும் குடித்துவிட்டு தங்களது ஓராண்டு நட்பை கொண்டாடினார்களா என்று குழம்பி வருகின்றனர்.