புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (21:46 IST)

தங்கச்சி கேட்டா கூட சொல்ல மாட்டீங்களா? விஜய் 63 தயாரிப்பாளரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

பிரபல தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தயாரிப்பில் தயாராகி வரும் 'விஜய் 63' படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் இரவும் பகலும் காத்திருக்கின்றனர். குறிப்பாக 'விஜய் 63' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாக வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
ஆனால் இதுகுறித்த எந்த அப்டேட்டையும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தராமல் உள்ளார். இந்த நிலையில் அர்ச்சனாவின் தங்கை ஐஸ்வர்யா கல்பாதி தனது டுவிட்டரில் 'அக்கா எனக்கு அப்டேட் வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். அவரை அடுத்து ஏஜிஎஸ் சினிமாஸ் மேனேஜர் அதிதி ரவீந்திரனும் தனக்கும் அப்டேட் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இந்த டுவீட்டுக்களுக்கும் அர்ச்சனா எந்த பதிலையும் கூறாமல் அமைதி காத்து வருகிறார்.
 
தங்கச்சி அப்டேட் கேட்டாலெ சொல்ல மாட்டேங்குறாங்க, நாம கேட்டா எப்படி தருவாங்க? என்று ரசிகர்கள் தற்போது புலம்பி வருகின்றனர். இருப்பினும் இன்ப அதிர்ச்சியாக எப்போது வேண்டுமானாலும் 'விஜய் 63' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது