வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 ஜூன் 2019 (21:08 IST)

அமலாபாலின் அடுத்த படத்தின் ஆச்சரியமான வியாபாரம்!

அமலாபால் நடிப்பில் உருவான 'ஆடை' திரைப்படம் சென்சாரில் 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் மிக விரைவில் வெளியாகவிருப்பதாக இன்று படக்குழுவினர் அறிவித்தனர். இந்த நிலையில் அமலாபால் நடித்த இன்னொரு படத்தின் வியாபாரம் முடிவடைந்துள்ளது
 
அமலாபால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள த்ரில் திரைப்படம் 'அதோ அந்த பறவை போல'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லிப்ரா புரடொக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் ஒரு ஆச்சரியமான தொகையை கொடுத்து பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே கவின், ரம்யா நம்பீசன் நடித்த 'நட்புன்னா என்னன்னு தெரியுமா? படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அமலாபால், ஆசிஷ் வித்யார்த்தி, சமீர் கொச்சார் உள்பட பலர் நடித்துள்ள 'அதோ அந்த பறவை போல' படத்தை வினோத் இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையில் சாந்தகுமார் ஒளிப்பதிவில் ஜான் ஆபிரஹாம் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார்.