விஷ்ணு விஷால் தந்தைக்கு வாழ்த்து கூறிய அமலாபால்

Last Updated: திங்கள், 11 மார்ச் 2019 (20:14 IST)
நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் தான் அவர் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்த ராட்சசன் படத்தில் மிக இயல்பான ஒரு நடிப்பு வெளிப்பட்டது
இந்த நிலையில் விஷ்ணு விஷாலின் தந்தை டிஜிபியாக பதவியுயர்வு பெற்றுள்ளார். இதனை விஷ்ணு விஷால் தனது டுவிட்டரில் பகிர்ந்ததோடு, தன்னுடைய ரோல்மாடலான தந்தைக்கு ஒரு சல்யூட் என்றும் தெரிவித்திருந்தார்.

விஷ்ணு விஷாலின் இந்த டுவீட்டை பார்த்த பல திரையுலகினர் விஷ்ணுவுக்கும் அவரது தந்தைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக 'ராட்சசன்' படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை அமலாபால், 'அங்கிளுக்கு எனது மிகப்பெரிய சல்யூட்' என்று வாழ்த்தியுள்ளார்.
மேலும் நடிகை சுனைனா, ஜெயம் ரவி, சாந்தனு உள்பட பலர் தங்களுடைய டுவீட் மூலம் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ள அடுத்த படத்திலும் அவர் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :