புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2019 (17:54 IST)

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் கஜோல், அமலாபால்

தமிழகத்தில் காமராஜ், அண்ணாதுரை,கருணாநிதி எம்ஜுஆருக்கு பின்னர் தமிழகத்தில் ஆளுமை மிக்க சக்தியாக உருவெடுத்தவர்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
தற்போது அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க கடும் போட்டி நிலவுகிறது. 'தி ஐயர்ன் லேடி' என்ற பெயரில் பிரியதர்ஷினி என்ற  பெண் இயக்குநர் இயக்குவதாகவும், இதில் நித்யா மேனன் நடிப்பதாகவும்  செய்திகள் வெளியானது.
 
இதனையடுத்து ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியானது. இதன் பர்ஸ் லுக் போஸ்டரும் வெளியானது.
 
இயக்குநர் கௌதம் மேனனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இணையதள தொடராக இயக்கிவருகிறார்.
 
இந்நிலையில் தமிழ்நாடு யுவ சக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இப்படத்தை அவரே தயாரித்து இயக்கவுள்ளார்.
 
இதற்கு சசிலலிதா என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது சசிகலாவின் பார்வையில் இதைப் படமாக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
சசிலலிதா படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஹிந்தி நடிகை காஜோலிடம் கதையைக் கூறி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.அதேசமயம் சசிகலா வேடத்தில் நடிக்க நடிகை அமலாபாலிடமும் அவர் பேச்சுவார்த்த்தை நடந்து வருகிறது.