1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (08:12 IST)

ஓவராய் கவர்ச்சி காட்டும் அமலா பால்: நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

நடிகை அமலாபால் தற்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால் நெட்டிசன்கள அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
மைனா படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற அவர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்தார். இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு பின்னர் ஏற்பட்ட பிரச்சனையில் அவரை விவாகரத்து செய்தார்.
 
சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் இல்லாததால் நடிகை அமலாபால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது சேலை அணிந்துகொண்டு முதுகு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லயா என விமர்சனம் செய்து வருகின்றனர்.