செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 31 ஜூலை 2021 (22:51 IST)

காவலர்களுக்கு வாரவிடுமுறை ! கமல்ஹாசன் டுவீட்

காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் இனிமேல் விடுமுறை அளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தமிழக டிஜிபி சைலேந்தர் பாபுவை பாராட்டியுள்ளார்.

காவல்துறையினருக்கு விடுமுறை என்பது இல்லாததால் அவர்கள் மனவிரக்தி, சோர்வு,  அடைந்துள்ளனர். இதனால் காவல்துறையினருக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, காவலர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து அவர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளித்து  உத்தரவிட்டுள்ளது.

தமிழகக் காவல்துறை டிஜிபியாக சைலேந்தர் பாபு ஐபிஎஸ் சமீபத்தில் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில். காவலர்களுக்கு வாரவிடுமுறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவுகள் நம்பிக்கையளிக்கின்றன. மகிழ்ச்சியான பணிச்சூழலில் தமிழக காவல்துறை இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழவேண்டும்.எனத் தெரிவித்துள்ளார்.