வீரமே வாகை சூடும்….கமல்ஹாசன் டுவீட்
உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் விக்ரம் படத்தை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ் சற்று முன்னர் அந்த படத்தின் பர்ஸ்ட் ரிலீஸ் ஆகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரே விக்ரம் படத்தின் டீசரை லோகேஷ் கனகராஜ் ரிலீஸ் செய்தார் என்றும் அதில் வேற லெவல் காட்சிகள் இருந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாக கூறப்படும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டெஸ்ட் படப்பிடிப்பு ரகசியமாக நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்தது. அதன்படி தற்போது தற்போது விக்ரம் பட போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட மூவரும் உள்ளனர்.
இந்நிலையில் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் குறித்து நடிகர் கமல்ஹாசன் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.
அதில், வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க.
நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம்.
விக்ரம்… விக்ரம் எனப்பதிவிட்டுள்ளார்.
இப்படம் கமல்ஹாசன் இதுவரை நடிக்காத தோற்றத்தில் இருக்கும் எனவும், லோகேஷ் கனகராஜின் படமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.