திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (19:31 IST)

அரக்கோணம் இரட்டை கொலை: கமல்ஹாசன் டுவீட்

அரக்கோணத்தில் நடந்த இரட்டை கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நீதி விசாரணை வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாளை ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த கொலை வழக்கு குறித்த விசாரணை உரிய முறையில் நடைபெற வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தேர்தல் முரண் தேர்தலோடு என்றில்லாமல்,சாதிய வன்மமாக மாறி அரக்கோணத்தில் அர்ஜூனன்,சூரியா என இரண்டு இளைஞர்களின் வாழ்வைப் பறித்து விட்டது. படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி கொலையாளிகள் தப்பித்துவிட அனுமதிக்கக் கூடாது.