வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (16:29 IST)

சூழியல் ஓர்மையற்ற அரசு விரட்டியடிக்கப்பட வேண்டும்: கமல்ஹாசன் டுவீட்!

காட்டு யானைகளின் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென ரயில் மோதி ஆண் யானை ஒன்று படுகாயமடைந்தது 
 
கோவை நவக்கரை பகுதியில் ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆண் காட்டு யானையை வனவிலங்கு அதிகாரிகள் உயிரை காப்பாற்ற முயற்சிகள் தீவிர முயற்சி எடுத்தனர் அந்த யானையின் தலை இடுப்பு பகுதியை படு சேதமடைந்த நிலையில் அந்த யானையை கிரேன் கொண்டு தூக்கி தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கூடத்தில் சிகிச்சையை தொடங்கினர்
 
7 மணி நேரமாக உயிருக்கு அந்த யானை போராடி வருவதாகவும் தந்தம் உடைந்து நொறுங்கி விட்டதால் ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சற்று முன் இந்த யானை குறித்து கமல்ஹாசன் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது
 
யானைகள் மரணம் அதிகரித்திருப்பது பற்றி  மநீம தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறது. நவக்கரையில் மீண்டும் ஒரு யானை ரயிலில் அடிபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சூழியல் ஓர்மையற்ற அரசு விரட்டியடிக்கப்பட வேண்டும்