திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 17 டிசம்பர் 2022 (19:23 IST)

குஷ்புவின் சகோதரர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்

Kushboo
நடிகை குஷ்புவின் சகோதரர் மரணம் அடைந்ததை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
நடிகை குஷ்புவின் சகோதரர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் தனது சகோதரர் உயிருக்காக போராடி வருகிறார் என்றும் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சகோதரரின் பயணம் முடிந்து விட்டது என்றும் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்
 
குஷ்புவின் சகோதரர் மரணம் அடைந்ததை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran