திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 17 டிசம்பர் 2022 (08:59 IST)

“அவர் மரணம் நிறைய நினைவுகளை கொண்டுவருகிறது”- பிரியா பவானி சங்கர் அஞ்சலி!

பிரபல சீரியல் இயக்குனர் தாய் செல்வம் நேற்று முன் தினம் இயற்கை எய்தினார்.

காத்து கருப்பு, மௌனராகம் சீசன்-1, நாம் இருவர் நமக்கு இருவர், தாயுமானவன், கல்யாணம் முதல் காதல் வரை, பாவம் கணேசன், தற்போது ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீசன் 2 என்று பிரபலமாக ஒளிபரப்பான பல விஜய் தொலைக்காட்சி சீரியல்களை இயக்கியவர் இயக்குநர் தாய் செல்வம்.

அவர் காலமானதை அடுத்து விஜய் டிவி அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. பல திரையுலக பிரபலங்களும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இவர் இயக்கிய கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில்தான் பிரியா பவானி சங்கர் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்நிலையில் அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பதிவிட்டுள்ள அவர் “இயக்குனர் தாய் முத்து செல்வத்தின் மறைவு நிறைய நினைவுகளை மீள்கொணர்கிறது. நான் எவ்வளவு தவறுகள் செய்தாலும், பொறுமையாக  இருப்பார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் மனதளவில் வெற்றிடத்தை உணர்கிறேன். என்ன சொல்வது என்றே தெரியவில்லை.” எனக் கூறியுள்ளார்.