1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (09:20 IST)

கே ஜி எஃப் படத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் மரணம்!

கேஜிஎஃப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார் கிருஷ்ணா ஜி ராவ்.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகி 1000 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கு மூலமாகவே வசூலித்தது.

இந்த இரு பாகங்களிலும் கண் தெரியாத முதியவர் வேடத்தில் நடித்திருந்தார் கன்னட நடிகர் கிருஷ்ணா ஜி ராவ். இரண்டாம் பாகத்தில் அவர் பேசும் “அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் “ என்ற வசனம் மிக பிரபலமாக அமைந்தது.

இந்நிலையில் அவர் நேற்று மரணமடைந்துள்ளார். இந்த செய்தி கேஜிஎப் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.