செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (16:32 IST)

மணமேடையிலேயே மணப்பெண் மரணம்....திருமணத்திற்கு வந்த உறவினர்கள் சோகம்!

marriage
திருமணம் நடக்கும்போது மணமேடையிலேயே  மணப்பெண் மரணமடைந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பத்வானா என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜ்பால். இவரது மகள் ஷிவாங்கி ஷர்மா(21).

இவருக்கும் புத்தேஸ்வர் மொஹாலா என்ற பகுதியில் வசிக்கும் விவேக் என்பவருக்கும் பெற்றோர்களால திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருமணம் நடந்தது.

அப்போது மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும்போது, ஷிவாங்கி  மாரடைப்பால் மேடையிலேயே மயங்கி விழுந்தார்.

உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

சுப நிகழ்ச்சி நடக்கவிருந்த வீட்டில் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்,

Edited By Sinoj