என் சகோதரர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்- நடிகை குஷ்பு
தன் மூத்த சகோதரர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகை குஷ்பு. இவர் 90 களில், தமிழ், கன்னடா, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு.
இவர், தற்போது சினிமாவில் நடிப்பதுடன் ஆன்மீகத்திலும் தீவிரமாக இயங்கி வருகிறார். திமுகவில் இருந்து விலகி, பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ள அவர் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.
இந்த நிலையில், சில நாட்களாகக அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லாத நிலையில், இதுகுறித்து அவர் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில், என் மூத்த சகோதரர் 4 நாட்களாக உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். இன்று சற்று முன்னேற்றம் தெரிந்தது., அவருக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Edited By Sinoj