பெரியாருக்கு முன்… பெரியாருக்குப் பின்- கமல்ஹாசன் பகிர்ந்த டிவீட்!

Last Modified வியாழன், 17 செப்டம்பர் 2020 (11:16 IST)

தமிழகத்தின் தந்தை பெரியார் அவர்களின் 142 ஆவது பிறந்தநாள் இன்று
கொண்டாடப்பட்டு வருகிறது.


திராவிடர் இயக்கத்தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 142 ஆவது பிறந்தநாளை தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் கோலாகலமாகக்
கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் தன்னை பகுத்தறிவாளராகக் காட்டிக் கொள்பவருமான் கமலஹாசன் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு டிவீட்டைப் பகிர்ந்துள்ளார்.

அதில் ’பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர்! புரட்சியின் வித்தாய் விளைந்து, இச்சமூகத்தின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் காரணியாய் கனிந்தவர்! "பெரியாருக்கு முன்" "பெரியாருக்குப் பின்" என தமிழர்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்.’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :