அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’.. 5 நிமிட வீடியோவை வெளியிட்ட சிம்பு..!
அதர்வா நடிப்பில் உருவாகும் அடுத்த படத்திற்கு "இதயம் முரளி" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இந்த படத்தின் ஐந்து நிமிட வீடியோவை நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை அடுத்து, அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதர்வா மற்றும் தமன் ஆகிய இருவரும் காதலை ப்ரொபோஸ் செய்ய ஐடியா செய்து கொண்டிருக்கும் நிலையில், ஐஸ்க்ரீமுக்குள் மோதிரம் வைத்து ப்ரொபோஸ் செய்யலாம் என்று அதர்வா ஐடியா கொடுக்கிறார்.
அதன்படி ப்ரொபோஸ் செய்யப்படுகிறது. கதாநாயகி அந்த மோதிரத்தை எடுத்து, காதலை புரிந்துகொண்டாரா என்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் பிறகு, அதே இடத்தில் தடபுடலாக திருமணத்திற்கான ஏற்பாடு நடக்கும் காட்சிகளும் உள்ளன.
இந்த ஐந்து நிமிடக் காட்சி, படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், காயடு, நட்டி நடராஜ், தமன், நிஹாரிகா, ரக்சன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஆகாஷ் இயக்கத்தில் சாய் ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.