1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Vishnu vishal dropped Mohandas movie latst buzz

இயக்குனரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்தைக் கைவிட்டாரா விஷ்ணு விஷால்?

விஷ்ணுவிஷால்
முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை மற்றும் ராட்சசன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நடிகர் விஷ்ணு விஷால். தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு மார்க்கெட்டை உருவாக்கியுள்ள அவர் இப்போது ராம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் மோகன்தாஸ் என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டு பெரும்பகுதி படமாக்கப்பட்டது. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் முக்கியக் கதாபாத்திரத்துல் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டீசர் வீடியோ கடந்த ஆண்டு இணையதளங்களில் வெளியானது. ஆனால் அதன் பின்னர் படம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குனர் முரளி கார்த்திக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தை கைவிட்டுவிட்டார் விஷ்ணு விஷால் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக அவர் 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
25 ஆண்டுகளுக்கு முன்னர் சீமான் இயக்கத்தில் நடிக்க இருந்த ‘காதல் ஒழிக’.. பார்த்திபன் பகிர்ந்த மலரும் நினைவுகள்!