1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Netizens fight in twitter for Modi and Periyar

யார் பெரிய ஆளு? பிரதமரா? பெரியாரா? – ட்விட்டரில் வலுக்கும் சண்டை!

Tamilnadu
இன்று பிரதமர் மோடி மற்றும் திராவிட கட்சி தலைவர் பெரியாரின் பிறந்தநாள் ஒரே நாளில் கொண்டாடப்படும் நிலையில் இருதரப்பினரிடையே ட்விட்டரில் மோதல் எழுந்துள்ளது.

இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனால் பல அரசியல் கட்சி தலைவர்களும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் அவரது தொண்டர்களும் ட்விட்டரில் அவரது பிறந்த நாள் குறித்த ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திராவிட கட்சியை தோற்றுவித்தவரான தந்தை பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வே.ராமசாமியின் 142வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. திராவிட இயக்க தலைவர்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். ட்விட்டரிலும் அவரது பிறந்தநாள் குறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில் அரசியல் நிலைப்பாட்டில் இருவேறு பக்கங்களை சேர்ந்தவர்களான இருவரது பிறந்தநாளும் ஒரே நாளில் வந்துள்ளதால் இருவருடைய தொண்டர்களிடையேயும் ஹேஷ்டேக் ட்ரெண்டிங் சூடுபிடித்துள்ளது. பலர் சக தலைவர்களை திட்டியும் ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருவதால் ட்விட்டரில் மோதல் எழுந்துள்ளதாக தெரிகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்கள், முக்கியமா மோடி.. சீமான் சொல்ல வருவது என்ன??