செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 17 செப்டம்பர் 2020 (08:40 IST)

இன்று தந்தை பெரியார் பிறந்த நாள்: டுவிட்டரில் வாழ்த்துக்களும் எதிர்ப்புகளும்!

தந்தை பெரியார் என்பவர் வாழும் போதும் இறந்த பின்னரும் சர்ச்சைக்குரிய ஒரு நபராகவே கருதப்பட்டு வருகிறார். அவரை திராவிடக் கட்சியினர் போற்றி புகழ்ந்து வந்தாலும் பலர் அவரது கருத்தை எதிர்ப்பு தெரிவித்தும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டுவிட்டரில் பெரியாரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு ஹேஷ்டேக்கும், எதிர்ப்பு தெரிவித்து ஒரு ஹேஷ்டேக்கும் வைரலாகி வருகிறது. குறிப்பாக  #ஈவேரா_எனும்_சாக்கடை என்ற ஹேஷ்டேக் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பெரியாரின் பிறந்த நாளை அடுத்து சினிமா பிரபலங்களும் பலர் பெரியாரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெரியார் குறித்து அவ்வப்போது பெருமையான கருத்துக்களை கூறிவரும் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது டுவிட்டரில் பெரியாரின் பிறந்த நாள் குறித்து கூறியதாவது:
 
பெரியார் விரும்பிய சாதிமத பேதமற்ற சமத்துவத்தை முன்பு எப்போதையும் விட மிக அதிகமாக உயர்த்திப் பிடிக்க வேண்டிய காலத்தில் நாம்இருக்கிறோம்.  அவர் முன்மொழிந்த சாதிஎதிர்ப்பை சொந்த வாழ்வில் எந்த அளவுக்கு சுயபரிசோதனை செய்கிறோம் என்பதில்தான் விடியலை நோக்கிய பாதை இருக்கிறது. வாழ்க பெரியார்