வெள்ளி, 14 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 14 பிப்ரவரி 2025 (12:12 IST)

ஜியோ- ஹாட்ஸ்டார் இன்று முதல் இணைப்பு.. இனிமேல் ஐபிஎல் போட்டிகள் இலவசம் கிடையாது..!

இதுவரை ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பு செய்து வந்த நிலையில், இன்று முதல் ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் இணைந்துள்ளதால் இனி ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சினிமா மற்றும் ஹாட்ஸ்டார் இணைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், லோகோவும் "ஜியோ ஹாட்ஸ்டார்" என மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவை இணைந்த பிறகு, ஐபிஎல் உள்பட கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளையும் இனி இலவசமாக பார்க்க முடியாது என்றும், சந்தா முறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 "ஜியோ ஹாட்ஸ்டார்" என்ற புதிய ஸ்ட்ரீமிங் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த செயலியில் 140 ரூபாய் அடிப்படை திட்டத்தை கொண்டு விளையாட்டு போட்டிகளை பார்க்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

னி ரிலையன்ஸ்-ஹாட்ஸ்டார் கூட்டு செயலியில் மட்டுமே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குளிர்கால ஒலிம்பிக், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளையும் இனி சந்தா செலுத்தினால் மட்டுமே பார்க்க முடியும் என கூறப்படுகிறது.

Edited by 
Mahendran