புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (21:20 IST)

சர்வதேச நீச்சல் போட்டி : பிரபல நடிகரின் மகன் வெள்ளிப்பதக்கம் !

பெங்களூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் பிரபல நடிகர் மாதவன் மகன் வேதாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் நடிகராக அறிமுகமானவர் பார்த்திபன். தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகராக நடித்துக்கொண்டுள்ளார்.
 
இந்நிலையில்,,இவரது மகன் வேதாந்த் திறமையான நீச்சல் வீரர் ஆவார். ஏற்கனவே அவர் பல போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார்.அதில் தேசிய அளவிலான ஜூனியர் நீச்சல் பிரிவில் கலந்து கொண்டு 3 தங்கப்பதங்களை வென்றுள்ளார்.
 
இந்நிலையில் இன்று 14 வயதிற்குட்பட்ட ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வேதாந்த்  வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.