1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By சினோஜ் கியான்
Last Updated : செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (18:41 IST)

தலைவணங்கி நிற்கிறேன்.. எனது 91 நாட்கள் பிக்பாஸ் பயணம் - சேரன் உருக்கம் ...

தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கிய இயக்குநர்களில் சேரனும் ஒருவர். இதுவரை மூன்று தேசிய விருதுகளைத் தனக்குரியதாக்கியவர். சமூக அவலத்தைச் சுட்டிக்காட்டி இவர் எடுத்த திரைப்படங்கள் அத்துணையும் காலத்தின் கண்ணாடி ஆகும். 
கடந்த 1997- ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியான பாரதி கண்ணம்மா,  1998 -ம் ஆண்டு வெளியான தேசிய கீதம் மற்றும் பொற்காலம், 2000- ல் வெளியான வெற்றிக் கொடி கட்டு, 2001 -ஆம் ஆண்டு பாண்டவர் பூமி, என்று அடுக்கடுக்கான வெற்றிப் படங்களை கொடுத்து வெற்றி இயக்குநராகவும், எதார்த்த இயக்குநராகவும் சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தார்.
திரைப்படத்துறையில் வெற்றிகரமான இயக்குநராக இயங்கிவந்த சேரன் இயக்குநர் தங்கர் பச்சான்  இயக்கிய ’சொல்ல மறந்த கதை’ என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார்.
அதன்பின்னர், நடிகர் விக்ரமை வைத்து இயக்குவதாக இருந்த ஆட்டோகிராப் படத்தில் சேரனே கதாநாயகன் ஆனார். தமிழ் சினிமாவைப் புதிய கோணத்தில் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே... எனப் படம் பார்க்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் சுயமாக மீள்பார்வை செய்ய வைத்தார். பட்டி தொட்டி எங்கும் படம் சூப்பட் ஹிட் அடித்து சேரனின் அற்புத திரைப் பரிமாணத்தைக் காட்டியது. பிறகு, தவமாய் தவமிருந்து( 2005), மாயக்கண்ணாடி(2007), பொக்கிஷம்(2009),  ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை (2011)ஆகிய திரைப்படங்களை இயக்கி தான் ஒரு சினிமா ஜாம்பாவான் என்பதை தனது திறைமையால் பறைசாற்றினார்.
சில படங்களின் தோல்வியால் துண்டுபோயிருந்த சேரன், தன்னைப் புதுப்பிக்கத் தவறியால் இன்று திரைத்துறையில் அவுட் ஆப் பார்மில் இருக்கிறார் எனவும் பேசப்பட்டார். சமீபத்தில் அவர் இயக்கி, நடித்திருந்த படமான திருமணம் அவரது ரசிகர்களைத் திருப்திப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ஸ்டார் விஜய் டிவியில் , கமலின் தொகுப்பாளராக உள்ள ’பிக் பாஸ் நிகழ்ச்சியில்’,பல முக்கிய பிரபலங்களுடன் இணைந்து பல தேசிய விருதுகளை வென்ற இயக்குநர் சேரனும் பங்கேற்றார். ஆரம்பம் முதலே அவருக்கு நேர்ந்த அவமானத்தைப் பொறுக்க மாட்டாமல் அவருக்கு நெருங்கிய ரசிகர்கள், இயக்குநர்கள் வெகுண்டெழுந்தனர். 
அதுகுறித்து சேரன் கூறியதாவது : நான் பட வாய்ப்புகள் இல்லாத போது, யாரும் எனக்குப் பண உதவியோ,பட இயக்கும் வாய்ப்புகளையோ, பொருளாதார உதவியோ செய்யவில்லை எனக் கூறி ஆதங்கப்பட்டார்.  மேலும், இந்த பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம்  கிடைக்கும் தினசரி பல  லட்சக் கணக்கான பணத்தைக் கொண்டு தனது தேவைகளை நிறைவு செய்து கொள்வேன் என சேரன்  கூறியதாக செய்திகள் வெளியானது.
 
இந்த சூழ்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை, அன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ( வெளியேற்றம் )செய்யப்பட்டார். இந்நிலையில், சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,’தலைவணங்கி நிற்கிறேன்..
எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி..
 
நேர்மை,நற்பண்பு,உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார்.
 
தற்போது சேரன்  படம் இயக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும் கூட, அவர் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இயக்குநர்தான் என்பதில் சந்தேகமில்லை. இனி அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தன்னை சேரன் தயார் செய்து கொள்வாரா என்பதைப் பார்கலாம். 
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சேரன் வெளியேறியது, அந்த நிகழ்ச்சிக்கு நல்லதோ இல்லையோ, ஆனால் பல தேசிய விருதுகளை வென்ற சேரனின் இமேஜுக்கு இது ரொம்ம நல்லது என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.