வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2019 (20:31 IST)

’பிகில் ஆடியோ விழா’ :பெண்கள் ஒரு முறைதான் தலை குனிய வேண்டும் - ஆனந்தராஜ்

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை அருகே உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர். விஜய்யின் பெற்றோர்களாகிய எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து விழாவை சிறப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் சற்று முன் ’பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடங்கியது. இந்த ஆடியோ விழாவை நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் தொகுப்பாளினி ரம்யா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த விழாவின் முதல் நபராக நடிகர் ஆனந்தராஜ் மேடையில் பேசியதாவது :
 
’’‘பிகில்’ திரைப்படத்துக்கு முன்புவரை விஜய்யை தான் ’விஜய் அண்ணா’ என்று அழைத்து வந்ததாகவும், ஆனால் ‘பிகில்’ படப்பிடிப்பின் போது தனக்கும் அவருக்கும் மிகவும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளதால் இனி அவரை ’நண்பன்’ என்றே அழைக்க இருப்பதாகவும் கூறினார்.
 
மேலும், இன்னும் 5 ஆண்டுகளில் விஜய்யின் மகனே நடிக்க வந்து விடுவார். அந்த சமயத்தில் மக்கள் நினைத்தால் விஜய் வேறு ஒரு இடத்தில் இருப்பார். வாழ்க்கையில் பெண் ஒரே ஒரு முறைதான் தலைகுனிய வேண்டும் அது திருமண சடங்கிற்காக மட்டும்தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்’’
 
ஆனந்தராஜின் இந்த பேச்சை கேட்டவுடன் விஜய் ரசிகர்கள் கைதட்டல் அவருக்கு உற்சாகம் அளித்தது.
 
வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் இந்த படத்தில் விஜய்,நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.